Nelson dilipkumar: முதல் படமே டிராப்..தன்னம்பிக்கை தளராத நாயகன்.. நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள் இன்று!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக்கொண்டு ரயில், பேருந்துகள் மூலம் சென்னைக்கு வந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் சினிமாவின் கோட்டையான கோடம்பாக்கம் திகழ்ந்து கொண்டு இருந்தது. பல இயக்குநர்கள், பல நடிகர்கள், பல எழுத்தார்கள் உருவாக்கியது இந்த இடம் தான்.

விடாமுயற்சியோடு: பல இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராக வேண்டும் என்பதற்காக கால் வலிக்க காத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போய் தன்நம்பிக்கை, விடாமுயற்சியையும் தனக்கானதாக பயன்படுத்திக் கொண்டு பல இயக்குநர்கள் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இப்போது வரும் இளம் இயக்குநர்கள் அனைவரும் வாய்ப்பை தேடாதே உருவாக்கு என்று குறும்படங்களை எடுத்து தனக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள்.

கனாகாணும் காலங்கள்: அப்படி தன்னம்பிக்கையால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராகி இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள் என்ற சீரியலை இயக்கினார். விஜய் டிவிக்காக பல நிகழ்ச்சிகளுக்கு இவர் தான் இயக்கினார். மேலும், ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவை இயக்கியதும் இவர் தான்.

director nelson dilipkumar birthday special roundup

முதல் படமே ட்ராப்: இப்படி சின்னத்திரையில் மாஸ் காட்டிவந்த நெல்சன் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானியை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். ஆனால், இந்த படத்திற்கு எழுந்த பல பிரச்சனைகளால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. நெல்சனின் திரைப்பயணம் பாதியில் முடிந்துவிடுமோ என்று பேச ஆரம்பிப்பதற்குள் கோலமாவு கோகிலா என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.

டாக்டர்: இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை கொடுத்தார். இந்த படமும் கோலமாவு கோகிலா திரைப்படம் போல நகைச்சுவைக்கு குறைவே இல்லாமல் ஹிட்டடித்தது. கொரோனா ஊரடங்கு பின் வெளியான இந்த படம் வசூலை அள்ளியது. இந்த படத்திற்குபின் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் எழுந்தாலும், படம் கணிசமான வசூலை பெற்றது.

director nelson dilipkumar birthday special roundup

ஜெயிலர்: தற்போது நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கிவருகிறார். தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நெல்சனுக்கு ரஜினியின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.