லக்னோ: ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் சமூக பொறுப்பு பிரிவு, உத்தர பிரதேசத்தில், ‘ஸ்பர்ஷ் சன்ஜீவனி’ என்ற செவிலியர் உதவி மருந்தகங்களை நிறுவியுள்ளது.
இம்மாநிலத்தின் மங்கள்பூர், மூஸா நகர், ராய்பூர் உட்பட ஐந்து கிராமங்களில், இந்த வித மருந்தகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், 2.5 லட்சம் மக்கள் பயன் பெறுவர்.
கிராம மக்களுக்கு எளிய முறையில், உரிய மருத்துவ உதவியை வழங்குவதற்காக, இந்த முன்னெடுப்பை, ஹூண்டாய் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்தவித மருந்தகம், ஹரியானா, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement