வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எந்த சக்தியாலும் இந்திய மக்களை தோற்கடிக்க முடியாது என நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: இந்தியா முன்னோக்கி செல்கிறது.நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எந்த சக்தியாலும் இந்திய மக்களை தோற்கடிக்க முடியாது. சில அந்நிய சக்திகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இதுபோன்ற சக்திகளுக்கு நம் நாட்டில் உள்ள மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கிறது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதால், அதை தீய சக்திகள் விரும்புவதில்லை. இந்திய மக்களின் ஒற்றுமையையும் அவர்கள் விரும்புவதில்லை. ஏதாவது பிரச்னை என்றால் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
எல்லையில் எதிரிகளுக்கு எதிராக நமது பலத்தை காட்டுவதற்கு பதிலாக நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். கொரோனா போன்ற தொற்று நோய்களின் போது கூட, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement