அலெக்ஸாண்ட்ரியா: நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பிறகு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் வர்ஜீனியாவில் உள்ள தேசிய அறிவியல் அகாடமிக்கு வருகை தந்தனர்.
தேசிய அறிவியல் அகாடமியில் அமெரிக்கா இந்தியா இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான தொழில்கள் மற்றும் திறன்களை கற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி மற்றும் ஜில் பைடனின் கலந்துரையாடல் சந்திப்பு நடந்தது.
மாணவர்களுடன் நடக்கும் இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:
இளமையான படைப்பாற்றல் மிக்க உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி
அடைகிறேன். தேசிய அறிவியல் அகாடமியுடன் இந்தியா பல திட்டங்களை செயல்படுத்தி
வருகிறது. இந்த சந்திப்பை ஒருங்கிணைத்த ஜில் பைடனுக்கு எனது நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்..
அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலையான பொராளாதார வளர்ச்சிக்கு திறமையான தொழில்நுட்ப அறிவு அவசியம். ஒருபுறம், அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியாவில் பெரும் அளவில் இளைஞர் சக்தி உள்ளது. அதனால்தான், இந்தியா – அமெரிக்க கூட்டாண்மை நிலையான உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என நான் நம்புகிறேன்
உங்களது வாழ்க்கையும் சாதனைகளும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகமாக இருக்கும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு கல்வி, திறன் மற்றும் புதுமை முக்கியம். இந்தியாவில், புதிய கல்விக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த கல்வி மற்றும் திறன் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளோம்.
இந்திய நிறுவனங்களுடன் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோரின் ஈடுபாட்டை அதிகரிக்க உள்ளோம். உலக கல்வி இயக்கத்தின் முன் முயற்சியாக அமெரிக்காவிலிருந்து 750 ஆசிரியர்கள் இந்தியா வந்துள்ளனர் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்:
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement