எச்சில் வழியாக கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனம் பிரிட்டனில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக சிறுநீர் மாதிரியை பயன்படுத்தும் சாதனம் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் எச்சில் வழியாக கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த ‘சாலிக்னாஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனம் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளது. ‘சாலிஸ்டிக்’ என்ற பெயரில் இந்த சாதனம் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தை எங்கும் எந்த நேரத்திலும் பயன்படுத்த முடியும். ‘தெர்மாமீட்டர்’ போல இந்த சாதனத்தை வாயில் வைத்து கொள்ள வேண்டும். சில நிமிடங்களில் எச்சில் வாயிலாக கர்ப்பம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement