கடந்த மே 2023 மாதந்திர விற்பனையின் முடிவில் டாப் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம். நாட்டின் முதன்மையான மாடலாக தொடர்ந்து ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் மாடல் 3,42,526 எண்ணிக்கையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்தபடியாக, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல் இரண்டாவது இடத்தில் 2,03,365 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் இடம்பெற்றுள்ளது.
Top 10 Selling Two Wheeler – May 2023
தொடர்ந்து நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது.
டாப் 10 இருசக்கர வாகனம் | மே 2023 | மே 2022 |
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 3,42,526 | 2,62,249 |
2. ஹோண்டா ஆக்டிவா | 2,03,365 | 1,49,407 |
3. பஜாஜ் பல்சர் | 1,28,403 | 69,241 |
4. ஹீரோ HF டீலக்ஸ் | 1,09,100 | 1,27,300 |
5. ஹோண்டா ஷைன் | 1,03,699 | 1,19,765 |
6. டிவிஎஸ் ஜூபிடர் | 57,609 | 59,613 |
7. சுசூகி ஆக்செஸ் | 45,945 | 35,709 |
8. பஜாஜ் பிளாட்டினா | 42,154 | 17,336 |
9. டிவிஎஸ் அப்பாச்சி | 41,955 | 27,044 |
10. டிவிஎஸ் XL100 | 35,837 | 35,148 |