சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் முதல் சென்னையிலேயே 3 இடங்களில் பங்களாக்களை கொண்டுள்ள நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
சோஷியல் மீடியாவில் உள்ள ஏகப்பட்ட ப்ளூ டிக்குகள் வழக்கம் போல விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
விரைவில் லியோ, அடுத்து தளபதி 68 என ரசிகர்களுக்கு வெயிட்டான ட்ரீட்டை கொடுக்கப் போகும் நடிகர் விஜய்யின் சம்பளம், ஆண்டு வருமானம், சொகுசு வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
தளபதி பர்த்டே: ஒவ்வொரு ஆண்டும் தனது பர்த்டேவை நலத்திட்ட உதவிகள் செய்யும் நாளாக நடிகர் விஜய் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு முன்கூட்டியே பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வைர நெக்லஸ் முதல் உதவித்தொகை வரை கொடுத்து அசத்தி விட்டார்.
பிறந்தநாள் அன்றும் தளபதி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
200 கோடி சம்பளம்: இந்தியாவிலேயே விஜய் அளவுக்கு எந்தவொரு நடிகருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் டிசி பட நடிகர்களின் சம்பளமே அதிகபட்சம் 180 கோடி தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 68 படத்துக்கு ஏஜிஎஸ் நிறுவனம் அதிகப்படியாக விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த சம்பளம் மட்டும் உண்மையாகும் பட்சத்தில் விஜய்யின் சொத்து மதிப்பு மேலும், அதிரடியாக அதிகரிக்கும் என்பது கன்ஃபார்ம்.
6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்: நடிகர் அஜித்தைத் தொடர்ந்து விஜய்யும் அலாதியான கார் பிரியர். அவரிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.
500 கோடி சொத்து: நீலாங்கரை, பனையூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக பங்களாக்கள் மற்றும் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு வரை 410 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த விஜய் லியோ படத்தின் சம்பளத்தை பெற்ற நிலையில், 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கிறார் எனக் கூறுகின்றனர்.
வெளிநாட்டில் குடும்பம்: நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா என இருவருமே வெளிநாட்டில் படித்து வருகின்றனர். அவர்களை பார்த்துக்கொள்ள நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் வெளிநாட்டிலேயே உள்ளதாக கூறுகின்றனர்.
அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் விஜய் ஷூட்டிங் முடிந்து கேப் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாட்டுக்கு சென்று தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் ‘லியோ’ விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!