விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்று, சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என கூறியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்தார்.
தாங்களும் அதைத்தான் கூறி வருவதாகவும் சீமான் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக பேசி வருவது குறித்தும் சீமான் கருத்து தெரிவித்தார். அதன்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்ற சீமான் அவர் நேர்மையான அதிகாரி என்ற முறையில் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியானவர்தான் என்றார்.
ஆனால் அவரது பேச்சால் பாஜக தமிழகத்தில் வளர்ந்து விடாது என்றும் சீமான் தெரிவித்தார். அண்ணாமலை தொடர்ந்து ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார். திமுகவை ஒருபக்கம் ஊழல் கட்சி என பேசி வரும் அண்ணாமலை, திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி தொலைபேசி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார் அண்ணாமலை. அதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்திருப்பதாக கூறப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவையும் விளாசி வரும் அண்ணாமலை, முதல்வராக இருந்த ஜெயலலிதாவே ஊழல் செய்தவர்தான் அதனால் தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலமாக உள்ளது என்றும் கூறியிருந்தார். அண்ணமலையின் இந்த பேச்சால் கடுப்பால் அதிமுகவினர் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.