அனிமல் படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன்பிறகு சாகித் கபூர் நடிப்பில் அதன் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கையும் இயக்கி வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டிலேயே தனது அடுத்த படத்தையும் இயக்கியுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. அனிமல் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே குட்பை மற்றும் மிஷன் மஞ்சு என இரண்டு இந்தி படங்களில் ராஷ்மிகா நடித்திருந்தும் அவருக்கு அவை பெரிய அளவில் பெயர் பெற்று தரவில்லை. அதனால் இந்த அனிமல் திரைப்படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ராஷ்மிகா. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

ரன்பீர் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா இந்த படத்தில் ரன்வீர் கபூரின் கதாபாத்திரம் ஒரு பாம் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரன்பீர் கபூருடன் பழகியபோது தான், கடவுள் அவரை கொஞ்சம் அதிக நேரம் எடுத்து படைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.