அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசு..சந்தன பேழைக்குள் இருந்த ரகசியம்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ள பரிசு பொருள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மோடிபிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் எகிப்து நாட்டிற்குச் செல்கிறார்.​ அதை சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இருக்கிறது… ஆனால்… சீமான் பளீச்!​
சந்தன பேழைதற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான அதிபரின் மனைவி ஜில் பைடனை சந்தித்தார். அப்போது இருதரப்பிலும் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அப்போது பிரதமர் மோடி அழகிய நுணுக்கமான கலை வேலைபாடுகளுடன் கூடிய சந்தன பேழையை அதிபர் ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார்.

​ நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழகத்தில்தான் உள்ளது… திருமாவளவன் சரமாரி சாடல்!​வெள்ளி விநாயகர், விளக்குஅந்த சந்தன பேழைக்குள் ஒரு வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த கைவினை கலைஞர் வடிவமைத்த வெள்ளி விளக்கு ஆகியவை இருந்தன. மேலும் அந்தப் பேழைக்குள் ‘தஸ் தனம்’ எனப்படும் பரிசும் இருந்தது. இது ஒரு நபர் தனது 80 வயதை பூர்த்தி செய்யும்போது வழங்கப்படுவதாகும். ஒருவர் 80 வயது 8 மாதங்களை பூர்த்தி செய்யும்போது 1000 பவுர்ணமிகளை கண்டவர் ஆவார்.​ மஞ்சள் காடாக நடிகை சதா… கிறங்க வைக்கும் போட்டோஸ்!​
1000 பவுர்ணமிகள்இதனை சஹஸ்ர பூர்ண சந்திரோதயம் என கொண்டாடுவார்கள். ஆயிரம் பௌர்ணமிகள் (சுமார் 80 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள்) கொண்ட காலத்தை உள்ளடக்கிய இந்த காலக் கட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த மைல்கல்லை எட்டிய தனிமனிதன் போற்றப்பட்டு கொண்டாடப்படும் காலம் இது. இந்த நேரத்தில் செய்யப்படும் வேத சடங்குகளில் விநாயகப் பெருமானுக்கு பிரார்த்தனை, பூர்ணாஹுதி எனும் புனித நெருப்புக்கு அர்ப்பணித்தல், சதாபிஷேகம் மற்றும் சஹஸ்ர சந்திர தரிசனம் ஆகியவை அடங்கும். இதனை ‘த்ரிஷ்ட சஹஸ்ரசந்திரோ’ என்று குறிப்பிடுவர்.​ மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்… கடலுக்கு அடியில் கேட்ட வித்தியாசமான சத்தம்.. பரபரப்பு தகவல்!​
உபநிஷத புத்தகம்அதிபர் ஜோ பைடன் அந்த காலக் கட்டத்தை கடக்க உள்ளதால் பிரதமர் மோடி இந்த பரிசுகளை அவருக்கு தேர்வு செய்து வழங்கியுள்ளார். அத்துடன் உபநிஷத கொள்கைகளின் 10 கோட்பாடுகள் அடங்கிய நூலின் முதல் அச்சுப் பதிப்பையும் ஜோ பைடனுக்கு வழங்கினார் பிரதமர் மோடி. இதேபோல் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடனுக்கு ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட பச்சை நிற வைரக் கல்லை பரிசாக வழங்கினார்.
​ இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம்… உமா கார்கி கைது.. கஸ்தூரி தடாலடி!​வைரக்கல்இந்த வைரக்கல் 7.5 கேரட் ஆகும். இந்த நேர்த்தியான வைரக்கல் பூமியில் வெட்டப்பட்ட வைரங்களின் வேதியியல் மற்றும் ஒளியியல் பண்புகளை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், சூரிய மற்றும் காற்றாலை போன்ற நிலையான வளங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் நட்பையும் உள்ளடக்கியது. இந்தப் பரிசுகளை வழங்கியதோடு ஒவ்வொரு பரிசுகளின் பின்னணி குறித்தும் இருவரிடம் விளக்கிக் கூறினார் பிரதமர் மோடி.
​ திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்… மளமளவென நடக்கும் தரிசனம்! ​பதில் பரிசுகள்தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் பிரதமர் மோடிக்கு பதில் பரிசுகளை வழங்கினர். அதன்படி வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான கையெழுத்துப் பிரதியான கேலி எனப்படும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் பழமையான புகைப்படக் கேமரா மற்றும் வனவிலங்குகளின் புகைப்படங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் ஜோ பைடன் கையெழுத்திட்டு வழங்கினார். ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற மாபெரும் அமெரிக்கக் கவிஞரின் கவிதைத் தொகுப்புகளின் முதல் பிரதியையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.​ அரசு ஆலோசகர் ஆகிறாரா இறையன்பு? சவுக்கு ஷங்கர் பதிவ பாத்தீங்களா!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.