”என் செல்லப்பேரு ஆப்பிள்”.. அப்படியொரு சர்ச்சையில் சிக்கிய முமைத் கான்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நடிகை முமைத் கான் கடந்த ஆண்டு ஒளிபரப்பான தெலுங்கு பிக் பாஸில் கடைசியாக ரசிகர்களுக்கு காட்சியளித்து குஷிப்படுத்தினார். 2004ம் ஆண்டு பாலிவுட் படத்தில் குத்தாட்ட நடிகையாக அறிமுகமான முமைத் கான் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி உள்ளார்.

மும்பையை சேர்ந்த முமைத் கானுக்கு 37 வயதாகிறது. தெலுங்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் தற்போது சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு நடிகை முமைத் கான் மீது டிரைவர் ஒருவர் கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாது குறிப்பிடத்தக்கது. அதுபற்றிய த்ரோபேக் ஸ்டோரியை இங்கே பார்க்கலாம்..

குத்தாட்ட நடிகை முமைத் கான்: தமிழில் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் தான் குத்தாட்ட நடிகையாக அறிமுகமானார் முமைத் கான். கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற “நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே” பாடல் வேறலெவலில் ஹிட் அடித்தது.

அந்த சமயத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முமைத் கான் ஆடும் ஐட்டம் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்து வந்தன. கந்தசாமி படத்தில் இடம்பெற்ற “என் பேரு மீனாகுமாரி” பாடலும் வேறல்வெல் ஹிட் அடித்தது.

Mumait Khan struggles her career after facing so many controversies

விஜய்யுடன் போக்கிரி படத்தில்: தெலுங்கு போக்கிரி படத்தில் மகேஷ் பாபுவுடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில் நடிகர் விஜய்யுடன் “என் செல்லப் பேரு ஆப்பிள்” பாடலில் காட்டுத்தன கவர்ச்சியில் ஆட்டம் போட்டிருப்பார்.

அந்த நேரத்தில் போக்கிரி பொங்கல், டோலு டோலுதான் பாடல்களை விட இந்த பாடல் அதிக இளைஞர்களை கவர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வில்லு படத்தில் இடம்பெற்ற டாடி மம்மி வீட்டில் இல்லை பாடலிலும் முமைத் கான் விஜய்யுடன் வெறித்தனமாக ஆட்டம் போட்டிருப்பார்.

Mumait Khan struggles her career after facing so many controversies

போதைப் பொருள் சர்ச்சை: சினிமாவில் குத்தாட்ட நடிகையாக கலக்கி வந்த முமைத் கான் திடீரென 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்தவொரு படங்களிலும் தென்படவில்லை. போதைபொருள் சர்ச்சையில் வசமாக சிக்கி இருந்தார் முமைத் கான். முக்கிய குற்றவாளியான கால்வின் மாஸ்செராஸ் உடனான நெருக்கம் தான் இவரை அதில் சிக்க வைத்ததாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போது பாதியிலேயே இவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கோமாவுக்கு சென்ற முமைத்கான்: தனது வீட்டில் தடுக்கி விழுந்ததில் கடந்த 2016ம் ஆண்டு முமைத் கானுக்கு தலையில் அடிபட்டது. உள்காயம் ஏற்பட்டு மூளைக்கே பிரச்சனை உண்டாகி விட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் கோமாவில் நடிகை முமைத் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கார் டிரைவர் புகார்: கடந்த 2020ம் ஆண்டு கடைசியாக நடிகை முமைத் கான் மேலும், ஒரு சர்ச்சையில் சிக்கினார். கோவாவுக்கு சென்ற போது வாடகை கார் ஒன்றை 3 நாட்கள் பயன்படுத்தி விட்டு சுமார் 15,000 ரூபாய் பணத்தை அவர் தரவில்லை என கார் டிரைவர் போலீஸில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதன் பின்னர், அமைதியாக மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்து வரும் முமைத் கான் தற்போது தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சி வீடியோக்களையும் தனது போட்டோக்களையும் எடுத்துப் போட்டு ரசிகர்களுடன் டச்சில் உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.