சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி கனவு கேள்விக்குறியான விரக்கிதியில் மாணவி தற்கொலை!

திருவண்ணாமலை அருகே சாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால், கல்லூரிப் படிப்பு தடைப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி,தனது தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.

பன்னியாண்டி சமுதாயத்தை சேர்ந்த இவர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

அப்போது பன்னியாண்டி சமுதாயத்துக்கு வழங்கப்படும் எஸ்.சி சாதிச் சான்று இல்லாததால், மாணவியின் உயர் கல்வி கேள்விக்குறியானது. திருவண்ணாமலை வருவாய் துறையிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், அவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அந்த மாணவி, கடந்த 17-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ராஜேஸ்வரின் உடல்நிலை நேற்று  மேசமடைந்துள்ளது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று  அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.