சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தண்டனை சட்டத்தின் கீழ் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட உடல்நிலைக் குறைபாடு காரணமாக சென்னை ஓமந்தூரார் […]