சென்னை செம்மொழிப் பூங்காவில் 2 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.
சென்னை செம்மொழி பூங்காவில் வரும் ஜூன் 24, 25 ஆகிய 2 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.” என் தெரிவித்துள்ளார்.