தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் இறுதி செய்யப்படும் பெயர் – சைலேந்திரபாபு குறி வைக்கும் பதவி!

தமிழ்நாடு டிஜிபி பணி ஓய்வு பெறுவதால் அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 22) டெல்லியில் நடக்கிறது. இதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.

புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பது எப்படி?சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும் என்றால், டிஜிபி அந்தஸ்தில் தகுதியான நபர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். உள்துறை அமைச்சகம் மூன்று பேரை டிக் அடிக்கும். மாநில அரசு அந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதன்படி தமிழக டிஜிபியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்!டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு ஜூன் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை. இதனால் 28ஆம் தேதி அல்லது 30ஆம் தேதி காலை புதிய டிஜிபிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு டிஜிபிக்கான தேடுதல் வேட்டை!தமிழ்நாடு டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பெரிய பட்டியலில் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், டி.வி.ரவிசந்திரன், சீமா அகர்வால், அம்ரேஷ் புஜாரி, ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், கே.வன்னிய பெருமாள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய டிஜிபி யார்?இந்தப் பட்டியலில் தகுதியான மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படும். பின்னர் அந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ள மூவரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்யும். இதில் சங்கர் ஜிவாலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சைலேந்திர பாபு குறி வைக்கும் பதவி!​​பணி ஓய்வுக்குப் பின்னர் சைலேந்திர பாபு முக்கிய பதவி ஒன்றை குறிவைத்துள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் பதவிக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அந்த பதவிக்கு சைலேந்திர பாபு முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள். டிஎன்பிஎஸ்சியில் சமீபகாலமாக சில குளறுபடிகள் நடைபெற்றுவருவதாக கூறப்படும் நிலையில் மக்களிடையே நல்ல அறிமுகமான சைலேந்திரபாபு அந்த இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.