தினமும் மனைவிக்கு போதை மருந்து; பல ஆண்களை வரவழைத்து பாலியல் வன்கொடுமை – 10 வருடமாக தொடர்ந்த கொடூரம்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக் (Dominique) . இவருக்கும் ஃபிராங்கோயிஸ் என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், டொமினிக் “a son insu” எனும் வலைதளக் குழுவில் இணைந்திருக்கிறார். அதில், போதைக்கு உட்பட்டவர்கள் தங்களை அறியாமலே உடலுறவில் ஈடுபடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவாதத்தால் ஈர்க்கப்பட்ட டொமினிக் தனது மனைவியை இந்த விபரீதத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்.

பென்டிரைவ்

மனைவிக்கு இரவு நேரத்தில் உணவில் போதைப்பொருளைக் கலந்துக் கொடுத்து அவர் மயக்கமடையும் நிலையில், தனது ஆண் நண்பர்களை வரவழைத்து மனைவியுடன் உறவில் ஈடுபட வைத்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “பெண்கள் உடை மாற்றும் போது அதை வீடியோ எடுத்ததாக டொமினிக் மீது புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரின் வீட்டை சோதனையிட்டபோது ஒரு ஹார்ட் டிஸ்க் (hard disk) கிடைத்தது.

அதில் “Abuse” எனப் பெயரிடப்பட்ட ஃபைல் இருந்தது. அதை சோதனையிட்டபோதுதான் அவரது மனைவியுடன் பல ஆண்கள் இருக்கும் வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவரிடம் விசாரித்தோம். அப்போதுதான் அவர் `a son insu’ என்ற வலைதளக் குழு குறித்து தெரிவித்தார். மேலும், ‘இரவு உணவில் மயக்கமருத்து கலந்துக் கொடுத்து, என் மனைவி மயங்கியதும் நண்பர்களை அழைப்பேன். அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, வரும் நண்பர்களின் வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்திவிட வலியுறுத்துவேன்.

பாலியல் வன்கொடுமை

மேலும், வரும் நண்பர்களின் வாசனையையோ அல்லது தவறவிட்டுப் போகும் ஆடைகளையோ என் மனைவி கண்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அதிக வாசனை வரும் திரவியங்களை பூசிக்கொள்ளக் கூடாது என்றும், ஆடைகளை சமயலறைக்குள்ளேயே கழற்றிவிடவும் கூறுவேன். அவர்கள் ஒன்றாக இருக்கும்போது வீடியோ எடுப்பேன்’ எனத் தெரிவித்தார். வீடியோவில் இருப்பவர்களின் வயது 26 முதல் 73 வரை இருக்கும். அவர்களை கைதுசெய்திருக்கிறோம்.

அவர்களில் தீயணைப்பு வீரர், லாரி டிரைவர், நகராட்சி கவுன்சிலர், வங்கியில் தகவல் தொழில்நுட்ப பணியாளர், சிறைக்காவலர், செவிலியர், பத்திரிகையாளர் எனப் பலதுறையைச் சார்ந்தவர்களும் இருந்தனர். 2011 முதல் 2020 வரை ஏறத்தாழ 10 ஆண்டுகள் இது தொடர்ந்திருக்கிறது. இதுவரை 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.மேலும் 51 பேரை கைதுசெய்திருக்கிறோம். இன்னும் குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடி வருகிறோம். டொமினிக் செயல்பாடுகள் குறித்து அறிந்த அவரது மனைவி ஃபிராங்கோயிஸ் மனமுடைந்திருக்கிறார். விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.