
தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடைகால விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களின் `சிட்தி தம்மல்’ நடனம் மேடையில் அரங்கேற்றினர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணியில் சேர்க்க நாங்கள் ரெடி என நயினார் நாகேந்திரன் பேட்டி.

அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை 2023 திரும்பப் பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திடீர் கனமழை காரணமாக ஜி.பி சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.

சிட்கோ வளாகத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி விசைத்தறி கூடத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி ஆய்வுசெய்தார்.

தமிழக அரசின் உத்தரவுப்படி நாகர்கோவிலில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!

தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் காவேரி ரயில் நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நகத்தில் வரையப்பட்ட ஒவியம்.

இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல அளவிலான சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து புதுச்சேரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

திடீரென பெய்த கனமழையால் பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்லும் வாகனங்கள்.

வீரமாணிக்கபுரம் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிம் மனு அளிக்க வந்தனர்.

புதிய சட்டப்பேரவை கட்டடம் கட்டுவது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்களுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து இலவச ஷூ, ஷாக்ஸ் சரிபார்க்கப்பட்டு மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்புல்லாணியில் ஆதி திராவிட நலத்துறையின் மாணவர் விடுதியில் சமைக்கப்பட்ட உணவினை சட்டமன்றக் குழுவினர் ருசி பார்த்து ஆய்வுசெய்தனர்.

அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

செயல்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்கள் நெல்லைக்கு மாற்றப்படாமல் குமரியிலே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சி.பி.ஐ.எம்., கட்சி சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திசையன்விளை பகுதிக்குட்பட்ட உவரி ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் சபாநாயகர் அப்பாவு பயனிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திடீர் கனமழையால் பள்ளியிலிருந்து மகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் தந்தை.

மழை நீர் சேமிப்பு அவசியம் குறித்து நடவடிக்கைகள
எடுக்க பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து மனு அளித்தனர்.