போக்குவரத்து விதிமீறல் : சீரியல் நடிகரின் அதிரடி ஆக்ஷன்
சென்னையில் ஏற்கனவே கனமழை காரணமாக சாலைகள் மோசமாக இருக்கிறது. அதில், வேன் டிரைவர் ஒருவர் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பொறுப்பில்லாமல் வேகமாக செல்கிறார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே வேனை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இதைபார்த்த பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகனான நடிகரான அருண் பிரசாத் அந்த டிரைவரை மடக்கி பிடித்து மெதுவாக ஓட்டும்படி அறிவுரை செய்ய, அதற்கு அந்த வேன் டிரைவர் அருண் பிரசாத்தை அநாகரீகமாக திட்டுகிறார். இதை வீடியோவாக எடுத்துள்ள அருண் பிரசாத் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததுடன், அந்த வேன் டிரைவர் மீதும் போலீஸில் புகார் அளித்துள்ளார். அருண் பிரசாத்தின் சமூக பொறுப்பை பாராட்டி சிலர் அவர் நிஜ வாழ்விலும் ஹீரோ ஆகிவிட்டதாக வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.