டில்லி வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகக் குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ளச் செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் […]
