ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 49 வயதை எட்டியுள்ள விஜய் திரைதுரையில் கடந்த 30 ஆண்டுகளாக பயணித்து வருகின்றார்.
ஆரம்பத்தில் பல அவமானங்கள், போராட்டங்கள் என இருந்த விஜய்யின் திரைப்பயணம் தற்போது விஸ்வரூபம் அடைந்துள்ளது. பல ஏற்ற இறக்கங்களை கடந்து இன்று இந்தியளவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார் விஜய். படத்திற்கு படம் வசூலில் சாதனை செய்து இன்று 200 கோடி வரை சம்பளமாக வாங்கும் விஜய் விரைவில் அரசியலிலும் அடியெடுத்து வைப்பார் என அனைவராலும் எதிர்பார்க்க படுகின்றது.
விஜய்- சங்கீதா
சமீபத்தில் 234 தொகுதிகளில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் விஜய். இந்த செயலின் மூலம் அரசியல் பயணத்தில் ஒரு அடி மேலே எடுத்து வைத்துள்ளார் விஜய் என சொல்லலாம்.. ருபக்கம் படங்கள், மறுபக்கம் அரசியல் திட்டங்கள் என செம பிசியாக இருக்கும் விஜய் தன் குடும்பத்திடருடன் நேரம் செலவழிக்கவும் அவர் தவறுவதில்லை.
Vijay: ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அடித்த எஸ்.ஏ சந்திரசேகர்..தட்டி கேட்டு சண்டைக்கு சென்ற வில்லன் நடிகர்..!
என்னதான் படங்கள் முக்கியமாக இருந்தாலும் தன் குடும்பத்தினருக்கே விஜய் முன்னுரிமை தருவார். இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வெளியாகும் நிலையில் அவரின் லவ் ஸ்டோரி பற்றியும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
லவ் ஸ்டோரி
அதாவது விஜய்யின் பூவே உனக்காக படத்தை பார்த்த பிறகு விஜய்யின் தீவிர ரசிகையாக மாறிவிட்டார் லண்டனை சேர்ந்த சங்கீதா. எனவே விஜய்யை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்த சங்கீதா விஜய்யை சந்தித்துள்ளார். அதன் பின் விஜய்க்கும் சங்கீதாவை மிகவும் பிடித்துப்போக இருவரும் காதலிக்க துவங்கினர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். என்னதான் விஜய் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரம் ஒருமுறை தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை தவறாமல் செய்து வருகின்றார் தளபதி.