சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான தொடராக பாக்கியலட்சுமி தொடர் காணப்படுகிறது.
இந்தத் தொடரில் மூன்று முக்கியமான கேரக்டர்களை வைத்து ஆடு புலி ஆட்டம் ஆடி வருகிறார் இயக்குநர்.
இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இதனால் இந்தத் தொடரின் டிஆர்பியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பழனிச்சாமி இனியாவிற்கு பரிசளித்த பேனா: விஜய் டிவியின் முன்னணி தொடராக உள்ள பாக்கியலட்சுமி, தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்து வருகிறது. தொடர்ந்து டிஆர்பியிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று முக்கியமான கேரக்டர்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்குள் இருக்கும் உறவுச் சிக்கல்களை மையமாக கொண்டு, அடுத்தடுத்த எபிசோட்களை தந்து வருகிறார் இயக்குநர்.
இந்தத் தொடரில் முதல் மனைவி மற்றும் தான் காதலித்து மணந்துக் கொண்ட இரண்டாவது மனைவி இவர்கள் இருவரையும் விட்டுவிட முடியாமல் தவிக்கும் கோபி என்ற கேரக்டரில் நடிகர் சதீஷ், சிறப்பாக நடித்து வருகிறார். இந்த கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் இருந்தாலும், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் கோபி, தொடர்ந்து சூட்டிங் மற்றும் அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கோபி கேரக்டர் கதையின் சிறப்பான நகர்தலுக்கு காரணமாக அமைகிறது. தன்னுடைய முதல் மனைவியை தான் விவாகரத்து செய்த போதிலும், அவர் மற்ற நபருடன் பழகுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் கோபி. இதையடுத்து அதற்கு காரணமான பழனிச்சாமியிடமே போய் அவரை தொடர்ந்து தன்னுடைய மனைவியிடம் பேசக்கூடாது என்று எச்சரித்து வருகிறார். பழனிச்சாமியோ, கோபியின் மனைவியை தனக்கு தெரியாது என்றும் தான் பாக்கியாவிடம்தான் பேசுவதாகவும் கலாய்க்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்படும் பாக்கியா, ராதிகாவிடமும் கோபியிடமும் ஆத்திரப்படுகிறார். இந்நிலையில், இனியாவிற்கு தேர்வு துவங்குகிறது. இதையொட்டி இரவு, பகல் பார்க்காமல் அவர் படிக்கிறார். இதனிடையே, பரிட்சை நாளில் காலையிலேயே வீட்டிற்கு வரும் பழனிச்சாமி, இனியாவை தேர்விற்காக வாழ்த்திவிட்டு, அவருக்கு காஸ்ட்லி பேனாவை பரிசளிக்கிறார். இதையடுத்து இனியா மிகவும் உற்சாகமடைகிறார். தான் வாங்க வேண்டும் என்று நினைத்த பேனா என்றும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோபி, ஆத்திரமடைகிறார். தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் கவர்ந்த பழனிச்சாமி, தன்னுடைய மகளையும் தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக அவர் நினைக்கிறார். இதனிடையே, கோபியிடம் அந்த பேனாவை இனியா, மகிழ்ச்சியுடன் காட்டுகிறார். இதையடுத்து அந்தப் பேனாவை வாங்குவது போல வாங்கி, கீழே தவறவிடுகிறார் கோபி. இதனால் அந்த காஸ்ட்லி பேனா உடைகிறது. இதனால் மனமுடைகிறார் இனியா. இதை பார்க்கும் குடும்பத்தினர் அனைவரும் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.
இதனிடையே, இனியாவின் தேர்விற்காக தான் வாங்கிய பேனாவை, அவருக்கு கொடுக்கிறார் கோபி. இதனால் இனியா சமாதானமடைகிறார். காஸ்ட்லி பேனா என்று திரும்ப திரும்ப கூறுகிறார் கோபி. இதையும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கின்றனர். இதையடுத்து கோபியுடன் தேர்வுக்கு புறப்பட்டு செல்வதாக தற்போதைய ப்ரமோவில் காணப்படுகிறது. பழனிச்சாமியும் பாக்கியாவும் பேசுவதை பொறுக்க முடியாத கோபி, அவரை வெறுப்பதன் விளைவு, தற்போது இந்த பேனா விஷயத்தில் வெளிப்பட்டுள்ளது.