புதுடில்லி: கோவிட் தடுப்பூசி போடுவதற்காக கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சமூக வலைதளத்தில் கசியவிட்டதாக பீஹாரை சேர்ந்த நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட தகவல்களை, சுகாதாரத்துறையில் பணியாற்றும் தனது தாயார் உதவியுடன் அந்த நபர் கசியவிட்டதாக கூறப்படுகிறது. ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண், மொபைல் எண் ஆகிய தகவல்களை அவர் கசியவிட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய டில்லி போலீசின் சிறப்பு படை அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement