Formal welcome to Prime Minister Modi in Washington DC | வாஷிங்டன் டி.சி.,யில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு

வாஷிங்டன்: நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான சம்பிரதாய முறைப்படி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே அவரை காண்பதற்காக கூடியிருந்த அமெரிக்கவாழ் இந்தியர்களுடன் சிறிது நேரம் மோடி பேசினார்.

பிரதமரை சந்தித்த அமெரிக்கவாழ், இந்திய சிறுவன் கூறியதாவது:

வாஷிங்டனினில் பிரதமர் இருப்பது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர், எனது சட்டையில் தனது கையெழுத்திட்டார். இது, மறுக்க முடியாத தருணம். இதை என்னால் மறக்க முடியாது.

பிரதமர் மோடியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்கிறேன். அவரை பார்த்து பேசியது சிறப்பான அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.