திருவனந்தபுரம்:விவாகரத்து வழக்கு நீண்டு கொண்டே சென்றதால் நீதிபதி காரை மண் வெட்டியால் தாக்கி உடைத்த முன்னாள் கப்பல் கேப்டன் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 55. கப்பலில் கேப்டனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி சவுமியா 48. கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர். கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் சவுமியா பத்தணந்திட்டா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி ஜெயபிரகாஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் திருவல்லா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக ஜெயபிரகாஷ் மங்களூருவில் இருந்து வருவார். நேற்று முன்தினம் விசாரணைக்காக வந்த போது வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ், அருகில் உள்ள கடைக்கு சென்று மண்வெட்டி வாங்கி வந்து நீதிபதி பில்குலினின் காரை அடித்து உடைத்தார். திருவல்லா போலீசார் ஜெயப்பிரகாைஷ கைது செய்தனர். மனைவியின் வழக்கறிஞரும், நீதிபதியும் சேர்ந்து தனது வழக்கை இழுத்தடிப்பதால் பெரும் பொருள் செலவு ஏற்படுவதாக அவர் போலீசில் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement