HBDThalapathyVIJAY: நம்ப மாட்டீங்க, ஆனால் விஜய்க்கு முதல் ஆளாக யாரு வாழ்த்து சொல்லியிருக்காங்கனு பாருங்க

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Vijay Birthday: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தளபதி விஜய்க்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

​விஜய் பிறந்தநாள்​கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக சிலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து தான் சமூக வலைதளவாசிகள் பேசி வருகிறார்கள்.

​இந்த விஜய்க்கு சத்தியமா ஹேட்டர்ஸே இல்லங்கசிரஞ்சீவி​எங்கள் குடும்பத்திற்கே மகிழ்ச்சியான நாள் இது​​அஜித் ரசிகர்கள்​விஜய்க்கு முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அஜித் குமார் ரசிகர்கள் தான். அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எப்படி மோதிக் கொண்டாலும் ஒரு நல்ல நாள், பிரச்சனை என்றால் ஒன்றுகூடிவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் விஜய்யை வாழ்த்தியிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.


​விஜய்க்கு வாழ்த்து​விஜய் என்றும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என அஜித் குமாரின் ரசிகர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். மேலும் அஜித்தும், விஜய்யும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, பாருப்பா அஜித் ரசிகர்கள் அழகாக வாழ்த்தியிருக்கிறார்களே என்கிறார்கள்.
அஜித்​​​லியோ ஃபர்ஸ்ட் லுக்​விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவில் வெளியிட்டார்கள். அந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. வெறித்தனமான சம்பவம் லோடிங் போல, நாங்கள் வெயிட்டிங் அண்ணா என தெரிவித்துள்ளனர்.
​சரத்குமார் வாழ்த்து​வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். வாரிசு படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு, லியோ படம் வெற்றி பெறவும் வாழ்த்தியிருக்கிறார். ரீல் அப்பாவின் வாழ்த்து கிடைத்துவிட்டது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
சரத்குமார்​​​லோகேஷ் கனகராஜ்​விஜய்யை தன் சொந்த அண்ணனாகவே பார்க்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் ட்விட்டரில் தன் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் லோகேஷ். மேலும் மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து படம் பண்ணுவதில் சந்தோஷம் என்று கூறியிருக்கிறார். விஜய்யும், லோகேஷும் மூன்றாவது முறையாக சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.
லோகி​​​கோபிசந்த் வாழ்த்து​தளபதி 68 படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் அவரும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். தான் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதை பார்த்தவர்களோ, அப்படி என்றால் கோபிசந்த் இயக்கத்தில் விஜய் நடிக்க முடிவு செய்திருப்பது உண்மை தான் போன்று என்கிறார்கள்.
கோபிசந்த்​​​ரசிகர்கள் போஸ்டர்​பிற ஆண்டுகளை போன்றே இந்த ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு சிறப்பு போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளார்கள் ரசிகர்கள். அதில் வருங்கால முதல்வர் விஜய் என குறிப்பிட்டுள்ளார்கள். விஜய்யை முதல்வர் நாற்காலியில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவது குறித்து தீவிரமான யோசனையில் இருப்பதுடன், மெல்ல மெல்ல களத்திலும் இறங்குகிறார் விஜய். அதன் ஒரு பங்காகத் தான் அண்மையில் நடந்த கல்வி விருது விழா பார்க்கப்படுகிறது.

​அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.