மும்பை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்தது.
ஆனால், இன்னும் படப்பிடிப்பு, கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் செப். 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரோடக்ஷன், எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம் அட்லீ.
இந்நிலையில், ஜவான் கிராபிக்ஸ் பணிகளுக்காக அட்லீ போட்டுள்ள பட்ஜெட் ஷாருக்கானையே திணறடித்துள்ளது.
பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான் கிராபிக்ஸ்: விஜய்யின் செல்ல தம்பியான அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார். முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்குகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
பான் இந்தியா படமாக உருவாகும் ஜவான், தமிழ் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். அதேபோல், இந்தப் படத்தின் கதை தமிழில் ஹிட் அடித்த ஒரு படத்தின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சொன்ன தேதியில் படத்தை முடிக்காமல் இழுத்து அடித்துள்ளார் அட்லீ.
இந்த பஞ்சாயத்துகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஜூன் 2ல் வெளியாகவிருந்த ஜவான் படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. அதன்படி, இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதற்குள் எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷனை முடிக்க அட்லீ தீயாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஜவான் படத்தில் ஏராளமான VFX காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கான் நடித்த படங்களில் அதிகம் VFX ஒர்க் செய்யப்பட்டது ராஒன் திரைப்படம் தான். ஆனால், அதனைவிடவும் ஜவானில் இன்னும் பிரம்மாண்டமாக கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்துள்ளாராம் அட்லீ. அதற்காக மட்டுமே 250 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளார்களாம். இந்த தகவல் பாலிவுட்டையே பதற வைத்துள்ளது.
கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 250 கோடி ரூபாய் என்றால், படத்தின் மொத்த பட்ஜெட் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். அட்லீயை நம்பி ஷாருக்கான் இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தாரா அல்லது இந்த பட்ஜெட்டை கேட்டு அதிர்ச்சியடைந்தாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இனி பட்ஜெட்டை பற்றியெல்லாம் யோசிக்க முடியாது, விரைவில் ஜவான் வெளியானால் போதும் என ஷாருக்கான் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டாராம்.