வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகை சென்றிருக்கும் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் பழமையான புத்தகம் மற்றும் கேமராவை பரிசளிக்க உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும், பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், கையால் எழுதப்பட்ட, பழமையான அமெரிக்க புத்தகமான ‛கேலி’யை பரிசாக வழங்க உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன், பழமையான கேமராவை பரிசாக வழங்கவுள்ளார். ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் முதல் கோடாக் கேமராவான இதில், காப்புரிமை அச்சும் இருக்கும். மேலும் ‛அமெரிக்கன் வைல்ட் லைப் போட்டோகிராபி’ முதல் பதிப்பில் பைடன் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு வழங்குவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement