தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங்கில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.அது மட்டுமில்லாமல் விஜய் படங்களின் அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் வெளியாகும் போதும் சோஷியல் மீடியாவை தெறிக்க விடுவார்கள் ரசிகர்கள். அந்த வகையில் நள்ளிரவில் வெளியாகியுள்ள ‘லியோ’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
நடிகர் விஜய் தனது 49 வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடுவதாக படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தது. இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதற்கு முன்பாகவே நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் தரமான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த போஸ்டரில் ரத்தம் தெறிக்க ஆக்ரோஷமான முகத்துடன் கையில் சுத்தியலுடன் விஜய் காட்சியளிக்கிறார். அவருடன் ஹைனா எனப்படும் கழுதை புலி ஒன்றும் உள்ளது. இந்த போஸ்டரில், ‘கட்டுங்கடாத நதிகளின் உலகில் அமைதியான நீர், தெய்வீகம் நிறைந்த கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக உருமாறும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக்கை தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும், இந்த போஸ்டர் லோகேஷ் கனகராஜ் படங்களின் பாணியில் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அவர் சொன்னதை போல ‘லியோ’ 100 % அவருடைய பாணியில் இருக்கும் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டரிலே கன்பார்ம் ஆகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Leo: தளபதி ஆட்டம் ஆரம்பம்.. ‘லியோ’ படக்குழு வெளியிட்டுள்ள தரமான அறிவிப்பு..!
இன்று ‘லியோ’ படத்தின் ‘நா ரெடி’ என்ற சிங்கிளும் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்தப்பாடலின் புரமோ வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. ‘லியோ’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இன்னும் பத்து நாட்களில் விஜய் நடிக்கும் போர்ஷன் முடிந்துவிடும் என்றும் லோகேஷ் கனகராஜ் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
‘லியோ’ படத்தினை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் ஏராளமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஷம் கொடுத்து கொல்ல சதி: பிரபல வில்லன் நடிகர் பரபரப்பு புகார்.!