Leo first single: வாயில் சிகரெட்.. கழுத்தில் சிலுவை.. 2000 டான்சர்கள்.. எப்படி இருக்கு “நா ரெடி”?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடி” தற்போது வெளியாகி உள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதி உள்ளார். நடிகர் விஜய், அனிருத் உடன் இணைந்து பிக் பாஸ் பிரபலம் அசல் கோலார் இந்த பாடலை பாடியுள்ளார்.

சரக்கு, தம் என சர்ச்சைகளை கிளப்பும் சகலமும் இந்த பாடலில் நிறைந்துள்ள நிலையில், பாட்டு எப்படி இருக்குன்னு இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

விஜய் டான்ஸ் மற்றும் லுக்: லியோ படத்தில் வயதானவராக வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஹேர்ஸ்டைலில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் என நினைத்து வந்த ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளிலேயே வேற லுக்கில் நடிகர் விஜய்யை காட்டி விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள “நா ரெடி” பாடலில் 2000 டான்ஸர்கள் ஆடியிருக்காங்க என்று சொன்னாலும், முதல் வரிசையில் முதல் ஆளாக ஆடும் விஜய் மீது மட்டுமே ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் பதிகிறது. நடனத்திலும் வழக்கம் போல தனக்கே உரித்தான ஸ்டைலில் மிரட்டி எடுத்துள்ளார் விஜய்.

வாய்ஸ் எப்படி?: இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என நாஸ்டாலஜிக் நினைவுகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். விஜய் மற்றும் அனிருத் இந்த பாடலை இணைந்து பாட, ராப் போர்ஷன் முழுவதையும் தரமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ட்ரோல் செய்யப்பட்ட அதே அசல் கோலார் தான்.

ருத்ரன் படத்தில் அசல் கோலாரின் ஜோர்த்தலாயா பாடல் இடம்பெற்ற நிலையில், அசல் கோலாரை லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்படி பயன்படுத்தி இருப்பதே சூப்பரான விஷயம் தான்.

சிகரெட்டும் சரக்கும்: பாடலில் சர்ச்சைக்குரிய விஷயமாக சிகரெட்டும் சரக்கும் இஷ்டத்துக்கு இடம்பெற்றிருக்கிறது. ஏதோ ஒரு பெரிய பார்ட்டியில் பிரியாணி விருந்து வைத்து மன்சூர் அலி கான் லெக் பீஸை கடிக்க விஜய் இறங்கி செம குத்து ஆடும் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது புரிகிறது.

ஆனால், அதற்காக பாட்டில் எல்லாம் பத்தாது, அண்டாவை கொண்டா சியர்ஸ் அடிக்க என வரும் வரிகள் எல்லாம் ரொம்பவே ஓவராக உள்ளது. மாஸ்டர் படத்தில் மிக்ஸியில் சரக்கு அடித்துக் குடிப்பார் விஜய், இந்த படத்திலும் குடிகாரனாகவே லியோ விஜய்யை காட்ட உள்ளாரா லோகேஷ் கனகராஜ் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிலும், மில்லி உள்ள போன கில்லி வரும் வரிகள் எல்லாம் குடிகாரர்களை தூண்டிவிடும் வரிகளாகவே மாறிவிடும் என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

கழுத்தில் சிலுவை: லியோ படத்தின் அறிமுக டீசரிலேயே சிலுவை இடம்பெற்றிருந்தது. லியோ என்கிற பெயர் லியோனார்டோ எனும் கிறிஸ்துவ பெயரின் சுருக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கழுத்தில் சிலுவை கொண்டு நடிகர் விஜய் மீண்டும் மீண்டும் ஜோசப் விஜய் பிரச்சனையை முன்னிறுத்தி வருகிறாரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

ரஜினி லிரிக்ஸ்: நடிகர் ரஜினிகாந்தின் பில்லா படத்தில் வரும் “நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு” பாடல் வரிகளை கொஞ்சம் மாற்றியமைத்து “ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு.. கேட்டாலே அதிரும் பார் உனக்கு” (சும்மா அதிருதுல்ல) என அதே ஸ்டைலில் பாடல் அமைந்துள்ளது.

மேலும், போக்கிரி படத்தில் இடம்பெற்ற போக்கிரி பொங்கல் வைப்ஸாகவே பாடல் இருப்பது போலவே தோன்றுகிறது. அண்ணன் ரெடி.. போஸ்டர் அடி என்பது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான வரிகளாகவே தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.