புதுடில்லி:தலைநகர் டில்லியில் இன்றும் வானம் மேகமூட்டமாகவே காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து, சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுடில்லியில் வரும் 27ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பில்லை. பிபர்ஜாய் புயல் தாக்கம் காரணமாக டில்லியில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வெப்பம் குறைந்துள்ளது.
டில்லியில் நேற்று வெப்பநிலை, குறைந்த பட்சம் 27.4, அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.
டில்லியில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசுக்கு கீழேதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் பருவமழை துவங்கும் தேதி இன்னும் கணிக்கப்படவில்லை. இருப்பினும் வரும் 27ம் தேதிக்குள் துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மே மாதம் 111 மி.மீ., மழை டில்லியில் பெய்துள்ளது. ஏப்ரலில் 20 மி.மீ., பெய்துள்ளது.
சாலையில் வெள்ளம்
டில்லி தேசிய தலைநகர் பகுதி மற்றும் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், புதுடில்லி – குருகிராம் விரைவுச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement