வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்நியா- அமெரிக்கா இடையேயான நட்புறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி செய்தியாளரகள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார்.
அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோபைடனை சந்தித்தார். பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மோடி பேசியது, இந்தியா-அமெரிக்க இடையேயான நட்புறவு வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது.. இரு நாடுகளும் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஜனநாயக நாட்டில் எந்த பாகுபாடும் இல்லை. இரு நாடுகளிடையே விண்வெளியில் முக்கிய ஒப்பந்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன. ‘அனைவரையும் இணைத்துச் சென்று, அனைவருக்கும் முன்னேற்றத்தை வழங்குவது’ என்ற ( சப்கா சாத், சப்கா விகாஸ்’) கோஷத்தை இந்தியா வலிறுத்துகிறது என்றார்.
ஜோ பைடன் பேசியது இந்தியாவுடனான அமெரிக்க பொருளாதார உறவு வளர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் இருமடங்காகி 191 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் பருவ நிலைமாற்றம் மிகப்பெரும் சவலாக உள்ளது. இந்த பிரச்னையை கையாள்வதி அமெரிக்க முன்னேற்றம் கண்டு வருகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement