கான்பெரா, ”திபெத்திய புத்த மதத்தின் தலைவரான அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதில் சர்ச்சையை ஏற்படுத்தி, நிரந்தர தலைவலியை உருவாக்கி கொள்ள வேண்டாம்,” என, சீன அரசுக்கு, நாடு கடந்த திபெத் அதிபர் பென்பா ஷெரிங் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான திபெத், 1959 முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு புத்த மதத் தலைவராக தலாய் லாமா, 87, உள்ளார்.
திபெத் புத்த மதத்தின் பாரம்பரியத்தின்படி, 14வது தலைவராக தலாய் லாமா தேர்வு செய்யப்பட்டார். வழக்கப்படி, திபெத்தில் உள்ளவர்களே அடுத்த தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
திபெத் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளதால், மற்ற இடத்தில் இருந்தும், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நாடு கடந்த திபெத் அரசின் அதிபராக உள்ள பென்பா ஷெரிங், ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தலாய் லாமா விவகாரத்தில், சீன அரசு எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டாம். திபெத் புத்த மதத்துக்கு இரண்டு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டால், அது சீன அரசுக்கு நிரந்தர தலைவலியாக உருவாகிவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement