கிருஷ்ணகிரி அருகே கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய ஜிகா ஃபேக்ட்ரி தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 5 GWh என துவங்கி முழுத் திறன் 100 GWh வரை படிப்படியாக விரிவாக்கப்படும்.
115 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலை முழுதிறனை எட்டும் பொழுது உலகின் மிகப்பெரிய பேட்டரி செல் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் என ஓலா எலக்ட்ரிக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ola GigaFactory
சமீபத்தில் 2 வீலர், 4 வீலர்களுக்கு பேட்டரி செல் முழுவதும் அதன் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்காக இந்நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஓலா எலக்ட்ரிக் EV மையத்தை அமைக்கும். இதில் மேம்பட்ட செல் மற்றும் மின்சார வாகன உற்பத்தி வசதிகள், விற்பனையாளர் மற்றும் சப்ளையர் பூங்கா மற்றும் EVகளுக்கான துணை சுற்றுச்சூழல் அமைப்பை ஒரே இடத்தில் உருவாக்க உள்ளது.
முதற்கட்டமாக, துவங்கப்பட்டுள்ள செல்களை தயாரிக்கு ஜிகா தொழிற்சாலை என்பது ஓலாவின் லட்சியம் மற்றும் தொழில்நுட்ப வல்லமைக்கு ஒரு சான்றாக மட்டும் இல்லாமல், உலகளாவிய EV மையமாக மாறும் இந்தியாவின் திறனை உணர்ந்து கொள்வதற்கான ஒரு முதற்படியாகும். EV வாகனங்களுக்கான அனைத்து முக்கியமான பாகங்களையும் உள்ளூர்மயமாக்குவது,
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், நாட்டின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வரும் நிலையில் கார் தயாரிப்பிலும் களமிறங்க உள்ளது. அடுத்த ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஓலா எலக்ட்ரிக் கார் சந்தைக்கு வரக்கூடும்.
வரும் ஜூலை மாதம் முதல் ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரியை துவங்க உள்ள நிலையில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட தயாராகி வருகின்றது.