சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லெக்சஸ் LM காரை அடிப்படையாக கொண்ட 2024 டொயோட்டா வெல்ஃபயர் ஆடம்பர எம்பிவி அறிமுகமானது. 3 மீட்டர் நீளம் பெற்ற வெல்ஃபயரில் 6 இருக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் மத்தியில் டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2024 Toyota Vellfire
டொயோட்டாவின் வெல்ஃபயர் எம்பிவி லெக்ஸஸ் எல்எம் காரின் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வாகனமாகும். இப்போது டொயோட்டாவின் TNGA-K மாடுலர் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வெல்ஃபயர் அதன் பாக்ஸி ஸ்டைல் கொண்டதாக உள்ளது. ஐந்து மீட்டருக்கும் குறைவான காரில் மூன்று மீட்டர் நீளமுள்ள வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆறு பேர் அமரும் வகையில் போதுமான இடவசதியைக் கொண்டுள்ளது.
புதிய மாடல் திருத்தப்பட்ட முகப்பு கிரில்லுடன் மிகவும் நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் கூர்மையான புதிய ஹெட்லைட் வடிவமைப்புடன் வருகிறது. பக்கவாட்டில், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. எல்இடி டெயில் விளக்குகள் காரணமாக பின்புற சுயவிவரம் கூர்மையாக காட்சியளிக்கின்றது.
உட்புறத்தில் புதிய கருப்பு மற்றும் பீஜ் அப்ஹோல்ஸ்டரி நிற விருப்பங்களுடன் மிகப் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிதக்கும் வகையிலான புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, புதிய ஸ்டீயரிங் மற்றும் அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகியவற்றைப் பெறுகிறது. இதன் நடு வரிசையில் கேப்டன் இருக்கைகளுடன் 2+2+2 இருக்கை அமைப்பைப் பெறுகிறது.
வெல்ஃபயர் இரண்டு என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கின்றது. முதலில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 275hp மற்றும் 430Nm டார்க் உருவாக்குகிறது. இதில் CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பவர்டிரெய்ன் 2.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் 250hp பவர் ஒருங்கிணைந்த e-CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.