Vijay: தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி, உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி: வைரல் போஸ்டர்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Viral Poster of Vijay: தளபதி விஜய் மீது கொண்ட பாசத்தால் அவரின் ரசிகர்கள் அடித்து ஒட்டியிருக்கும் போஸ்டர் பற்றி சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

​தளபதி பிறந்தநாள்​தளபதி என ரசிகர்கள் கொண்டாடும் விஜய்யின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி விஜய் ரசிகர்கள் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர். அதே சமயம் விஜய் மீது கொண்ட அதீத பாசத்தால் வித்தியாசமாக யோசித்து போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். அதில் இரண்டு போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

​இந்த விஜய்க்கு சத்தியமா ஹேட்டர்ஸே இல்லங்கசரத்குமார்​”எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!​​வைரல் போஸ்டர்​பாசத்திற்கு பெயர் போன மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது, 65 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிகள் மாறினாலும்.. மக்கள் துயர்படும் காட்சிகள் மட்டும் மாறவில்லை..தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி. உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி. 2026- time to lead என தெரிவிக்கப்பட்டுள்ளது.
​வருங்கால முதல்வர் விஜய்​2026ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக வர வேண்டும் விஜய் என அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் திராவிட ஆட்சியை முடித்து வைக்குமாறு ரசிகர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். மேலும் யாருடனும் கூட்டணி வேண்டாம், சிங்கம் சிங்கிளாகத் தான் வர வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​Thalapathy Vijay: பணம் கொட்டு கொட்டுனு கொட்டும் விஜய்யின் சூப்பர் சைட் பிசினஸ்

​பரபரப்பு போஸ்டர்​அதே மதுரையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி மேலும் ஒரு போஸ்டரையும் ரசிகர்கள் ஒட்டியிருக்கிறார்கள். அந்த போஸ்டரிலோ, அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே… ஆண்டவர்-ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வனே என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை மனதில் வைத்து தான் போஸ்டர் அடித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என பேச்சு கிளம்பியது.

​அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?

​அறிவுரை​Vijay: கொட்டும் மழையில் மனைவியுடன் இயக்குநர் வீட்டு வாசலில் வந்து நின்ற விஜய்போஸ்டர்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, விஜய் மீது அவரின் ரசிகர்கள் வைத்திருக்கும் பாசம் புரிகிறது. ஆனால் இவர்களே சும்மா இருப்பவர்களை தூண்டிவிட்டு விஜய் வீட்டுக்கு ரெய்டு வர வைத்துவிடுவார்கள் போன்று. பேச்சால் அல்ல செயலால் பதில் சொல்பவர் விஜய். அதனால் அவரின் ரசிகர்களும் பேச்சை குறைத்துக் கொள்வது விஜய்க்கு நல்லது என தெரிவித்துள்ளனர்.

​நா ரெடி​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்காக அவர் பாடியிருக்கும் நா ரெடி பாடல் அரிசயலுக்கு வர நா ரெடி என தளபதி கூறுகிறார் என்கிறார்கள் ரசிகர்கள். அண்ணா இது போதும், விரைவில் முடிவு எடுங்கள். முதல்வர் நாற்காலி உங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என ஃபீலிங்ஸுடன் தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்.

​Thalapathy Vijay: தளபதி விஜய்யின் அரிய புகைப்படங்கள்​
​பார்த்து விஜய்​விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆசையும் கூட. அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் முதலில் சந்தோஷப்படுவது எஸ்.ஏ. சி.யாகத் தான் இருக்கும். மகனை ஹீரோவாக்கிப் பார்த்தவர் தற்போது அவரை அரசியல் களத்தில் பார்க்க விரும்புகிறார். இதற்கிடையே ஆனானப்பட்ட விஜயகாந்தையே அரசியல் களத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். அதனால் விஜய் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.