சென்னை: Vijay (விஜய்) விஜய்யை கமர்ஷியல் ரூட்டுக்கு மாற்றிவிட்ட இயக்குநர் ரமணாவுக்காக விஜய் செய்த விஷயங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது.
கோலிவுட் ஹீரோக்களில் அதிக வியாபாரம் நடப்பது விஜய்யின் படங்களுக்குத்தான். ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவருகின்றனர். கடைசியாக வெளியான வாரிசு படம் விமர்சன ரீதியாக சரியாக போகாவிட்டாலும் வசூல் 300 கோடி ரூபாய்க்கும் மேல் என தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கும் முன்னதாக வெளியான பீஸ்ட், மாஸ்டர், மெர்சன் என வரிசையாக அவர் நடித்த படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலை ஈட்டியது.
கமர்ஷியல் கிங்: நடிக்க வந்த புதிதில் காதல் படங்களுக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் விஜய். குறிப்பாக 90களில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அந்த ஜானரில் வந்தவை. இப்படிப்பட்ட சூழலில்தான் திருமலை படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் விஜய்யை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய் தற்போது கமர்ஷியல் கிங்காக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
விஜய்யிடம் கதை சொன்ன கதை: திருமலை படத்தை இயக்கியது ரமணா என்ற இயக்குநர்.முதலில் அவர் தெலுங்கில் பிரபாஸிடம் திருமலை கதையை கூற அது அவருக்கு ஒத்துவரவில்லை. இதனையடுத்து சென்னை திரும்பிய ரமணா இயக்குநர் ராதாமோகன் உதவியுடன் விஜய்யிடம் கதை சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக திருமலை கதையை சீன் பை சீனாக விஜய்யிடம் சொன்னார் ரமணா.
ரியாக்ஷன் காட்டாத விஜய்: எப்போதும் அமைதியான முகத்துடனே இருக்கும் விஜய் திருமலை கதையை கேட்ட பிறகும் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாகவே இருந்திருக்கிறார். இதனால் அப்செட்டான ரமணா வெளியே சென்று ஒரு சிகரெட்டை பிடித்துவிட்டு வந்தவுடன் நீங்கள் அப்பாவிடம் கதை சொல்லுங்கள் என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அனுப்பினாராம் விஜய். விஜய்க்கு கதை பிடித்திருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் ராதாமோகனிடம் புலம்பியிருக்கிறார் ரமணா.
விஜய் ஒத்துக்கொண்டார்: அதற்கு ராதாமோகனோ விஜய் அவருடைய அப்பாவிடம் அனுப்புகிறார் என்றால் அவர் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்று அர்த்தம் என ரமணாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு எஸ்.ஏ.சியும் கதை கேட்க திருமலை டேக் ஆஃப் ஆகியது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து விஜய்யை ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜுக்குள் கொண்டு போய் நிறுத்தியது.
கொட்டும் மழையில் விஜய்: திருமலை வெற்றிக்கு பிறகு ரமணாவுக்கு புற்றுநோய் வந்திருக்கிறது. இதை தொலைபேசியில் விஜய்யிடம் ரமணா தெரிவித்ததும் பதறிப்போன விஜய் தனது மனைவியுடன் கொட்டும் மழையில் ரமணாவின் வீட்டுக்கு வந்து உங்கள் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன். நீங்கள் உடனே வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக கிளம்புங்கள் எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார். மேலும் சிகிச்சைக்காக உதவியும் செய்திருக்கிறார். இது ரமணாவை ரொம்பவே எமோஷல் ஆக்கிவிட்டதாம். இந்தத் தகவலை இயக்குநர் ரமணா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
லியோ: விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் லுக்கு நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.