அகண்டா இயக்குனர் உடன் இணைகிறாரா சூர்யா?
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், ஹிந்தி படம் ஒன்றிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே தெலுங்கு சினிமாவின் மசாலா இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் போயபட்டி சீனு விரைவில் சூர்யா வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது எனவும் இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.