பாட்னா இன்று பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின் சரத்பவார் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.. இதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. அக்கட்சி தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே வேளையில் எதிர்த்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாகத் திரட்டி, சுமார் 400 […]