வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் விருந்தளித்து கவுரவித்தார். இதன் மூலம் இந்தியா-அமெரிக்கா உறவு மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நம்நாட்டில் தலைநகர் டெல்லியில் தூதரகத்தையும், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத்தில் துணை தூரகங்களையும் அமெரிக்கா அமைத்துள்ளது. இரு நாடுகள் இடையேயான மக்கள் உறவு மேலும் வலுவடைவதை உறுதி செய்ய கர்நாடகாவின் பெங்களூரு, குஜராத்தின் அகமதாபாத் நகரங்களில் மேலும் இரு துணை தூரகங்களை திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகமும், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஹூஸ்டன் மற்றும் அட்லாண்டா நகரிங்களில் இந்திய துணை தூதரகங்களும் உள்ளன. தற்போது அமெரிக்காவின் சியாட்டில் நகரில் மேலும் ஒரு துணை தூதரகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்திய மாணவர்கள் 1,25,000 பேருக்கு அமெரிக்கா விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது.