செங்கல்பட்டு: “கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்” என்று இன்னமும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கோர்ட் வாசலிலேயே ஒரு பாசப்போராட்டம் நடந்துள்ளது.. இதை பார்த்து செங்கல்பட்டே திகைத்துவிட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது சங்கராபுரம்.. இங்கு வசித்து வருபவர் மோகன்.. 32 வயதாகிறது.. இவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். கல்யாணமாகிவிட்டது. மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்..
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் ஹாஸ்டல் ஒன்றில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. அது ஒரு தனியார் ஹாஸ்டல்.. பெண்கள் + ஆண்கள் என அனைவருமே தங்கக்கூடியது..
லேப்டாப்கள்: அந்த ஹாஸ்டலில், லேப்-டாப்களும், செல்போன்கள் திருடு போயிருக்கிறது.. இது சம்பந்தமாக கேளம்பாக்கம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.. அப்போது, ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.. இதனிடையே, மோகனுக்கு நேற்று ஜாமீன் கிடைத்திருக்கிறது.. எனவே, அவர் செங்கல்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்..
அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக, அவரது மனைவி, மகனை அழைத்துகொண்டு கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். அவர்களுடன் அப்போது வக்கீலும் இருந்தார்… ஜெயிலில் இருந்து மோகன் வெளியே வந்தததுமே, அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார்… ஆனால், அதற்குள் மஃப்ட்டியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்துவிட்டனர்..
திருட்டு வழக்கு: இன்னொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்யவும் முயன்றனர்.. அத்துடன் மோகனை, வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று, வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.. இதையெல்லாம் பார்த்து மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.. தன்னுடைய கணவரை கைது செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்..
வக்கீல் எங்கே? பிடிவாரண்டு எங்கே? பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? முதல்ல பிடிவாரண்டை காட்டிவிட்டு, என் கணவனை அழைத்து செல்லுங்கள் என்று கோர்ட் வாசலிலேயே ஆவேசமாக சீறினார்.. ஆனாலும், போலீசார் இதை கண்டுகொள்ளாமல், மோகனை இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.
கெஞ்சினார்: இதனால் பதற்றமும், டென்ஷனும், ஆவேசமும் அடைந்த மோகன் மனைவி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினார்.. பிறகு திடீரென தன்னுடைய கணவர் மோகனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.. ஒருகையில் மகனை பிடித்துக்கொண்டே, போலீசாரிடம் கெஞ்சினார்.. எப்படியாவது, கணவனை காப்பாற்றிவிட வேண்டும், சிறைக்கு மட்டும் அனுப்பிவிடக்கூடாது என்ற தவிப்பு, அந்த பெண்ணிடம் காணப்பட்டது.
வேறு வழி எதுவுமே தெரியாமல், கண்ணீர்விட்டு கதறினார்.. இந்த பாசப்போராட்டத்தினை கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த அனைவருமே பார்த்து மனம் கலங்கினர்.. அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்து நின்றனர்.. பிறகு, கணவர் மோகனை அழைத்துக்கொண்டு, அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர் புகார்கள்: இதைபற்றி போலீசார் சொல்லும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஹாஸ்டல்களில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்துள்ளன.. இதுபற்றிதான் மோகனிடம் மறுபடியும் விசாரிக்க முடிவு செய்து வந்தோம்” என்றன.
கணவனை கட்டிப்பிடித்து, கதறியழுது, மனைவி நடத்திய இந்த பாசப்போராட்டம், கோர்ட் வாசலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.