இந்திய ரயில்வேயின் 16 மண்டலங்களில் ஒன்றாக தெற்கு ரயில்வே திகழ்கிறது. இதன்கீழ் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வே அறிவிப்புபராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம், பாதியளவு ரத்து, முழுவதும் ரத்து ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சில முக்கிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. நேர மாற்றம் செய்யப்பட்ட அறிவிப்பில் சென்னை சென்ட்ரல் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா ரயில் விபத்துஇது இரவு 7.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக 8.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதையடுத்து விரைவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பியது.
சாம்பல்பூர் டூ தாம்பரம் சிறப்பு ரயில்தற்போது ஒடிசாவிற்கு மக்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் முன்பதில்லாத சிறப்பு ரயில் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் சேவை தாம்பரத்தில் இருந்து சாம்பல்பூருக்கு நேற்றைய தினம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து ரயில் எண் 06076 கொண்ட சாம்பல்பூர் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் சிறப்பு ரயில் வரும் ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு புறப்படுகிறது.
ஹவுரா – மைசூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்இது அடுத்த நாள் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். ஒரே ஒரு சேவை மட்டும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் பகனகா பஸார் ரயில் நிலையம் அருகே நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை, ஜூன் 23ஆம் தேதி பிற்பகல் 4.15 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும் ரயில் எண் 22817 கொண்ட ஹவுரா – மைசூரு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சந்திராகச்சி – சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ஜூன் 25ஆம் தேதி மைசூருவில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் ரயில் எண் 22818 கொண்ட மைசூரு – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு சந்திராகச்சியில் இருந்து புறப்படும் ரயில் எண் 22807 கொண்ட சந்திராகச்சி – சென்னை சென்ட்ரல் ஏசி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில்ஜூன் 25ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் – சந்திராகச்சி ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து ரயில் எண் 16128 கொண்ட குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இடையில் வர்கலா சிவகிரியில் ஒரு நிமிடம் நிற்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்கலா சிவகிரி ரயில் நிலையம்இது வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, கொல்லத்தில் 3.42 மணிக்கு வருகை புரிந்து 3.45 மணிக்கு புறப்படுகிறது. வர்கலா சிவகிரியில் 4.05 மணிக்கு வருகை புரிந்து 4.06 மணிக்கு புறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் 5.10 மணிக்கு வருகை புரிந்து 5.15 மணிக்கு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ரயில் பயணிகள் தவறவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.