சென்னை: காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் தினமும் அழுது புலம்பினேன் என்று நடிகை ஷெரின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான ஷெரின், குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
நடிகை ஷெரின்: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷெரின், துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் போது எனக்கு சுத்தமா தழிழே தெரியாது, ஆனால், செல்வராகவன் சார் தமிழ் எப்படி பேசனும் என்று சொல்லி கொடுத்தார். அந்த படத்தில் நானும் தனுஷும் நடிக்கும் போது ரொம்பவே பதற்றமாகத்தான் இருந்தோம். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன்.
மன அழுத்தத்தில் இருந்தேன்: மேலும் பிக் பாஸ் சீசன் 1 மற்றும் 2க்கு என்னை அழைத்தார்கள் அப்போது தான் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிக்கு போக மனம் வரவில்லை வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மீண்டும் எனக்கு பிக் பாஸ் சீசன் 3க்கு வாய்ப்பு வந்தது அப்போது, நான் எனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன், தினமும் அழுதுக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தேன். இந்த மன அழுத்தத்தில் இருந்த எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்று நினைத்தேன் அப்போதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
வாழ்க்கையே மாறிவிட்டது: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் மனதில் ஒரு வெறி இருக்க வேண்டும் அந்த வெறி காதல் தோல்வியால் எனக்கு இருந்தது. இதனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அறிமுகம் இல்லாத நபர்கள், போன் இல்லை, நண்பர்கள் இல்லை. ஆனால், காதல் தோல்வியைவிட அந்த வலி எனக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்: அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் நான் இன்னும் பிரபலமாகிவிட்டேன் எந்த இடத்திற்கு நான் சென்றாலும் என்னுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் இதைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ சாதித்தது போல உணர்கிறேன் என்று நடிகை ஷெரின் அந்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை பேசி உள்ளார்.