நாகப்பட்டினம்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.. 43 வயது கள்ளக்காதல், வாரிசுருட்டி தடம்தெரியாமல் அழித்து விட்டு போய்விட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.. மனைவி பெயர் துர்கா தேவி.. 43 வயதாகிறது.. இவர்களுக்கு தினேஷ் என்ற 20 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
துர்காதேவி கடந்த 18ம் தேதி நைட் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார்.. மகளிர் சுயஉதவி குழு கடன் தொகையை கட்டுவதற்காக செல்வதாக கூறி சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு, வீட்டுக்கு திரும்பவில்லை.. மறுநாள் காலை, புஷ்பவனம் பீச்சில், துர்காதேவி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இவர்கள் வசிக்கும் தேத்தாகுடியிலிருந்து, இந்த பீச் 10 கி.மீ தொலைவில் உள்ளது.. இதனால் குடும்பத்தினர் பதறிப்போய் பார்த்தபோது, புஷ்பவனம் கடற்கரையில் தலையில் காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்திருக்கிறது.. உடனடியாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து கிளம்பி வந்தனர்.
விசாரணை: இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர்.. இந்த விசாரணையின்போதுதான், துர்கா தேவியின் கள்ளக்காதல் அம்பலமானது.. 43 வயது துர்காவின், கள்ளக்காதலனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. அதாவது தன்னுடைய சொந்த மகனின் வயது.
அழகுக்கண்டர்காட்டை சேர்ந்த அந்த கள்ளக்காதலன் பெயர் அருண்.. இந்த வழக்கில் இவரது பெயர் அடிபட்டதுமே, போலீசார் அருணை பிடித்து விசாரித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், அருண் ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் என்ற தகவல் தெரியவந்தது.. சேலம் தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் வருட மயக்கவியல் படிப்பு படித்து வருகிறாராம்..
பிசினஸ்: ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் செய்து வந்துள்ளார்.. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து, அவைகளை வேதாரண்யம் பகுதியில் வாட்ஸ் அப் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்தாராம்.. இதை பார்ட்-டைம் வேலையாக செய்து வந்திருக்கிறார்.
அப்படி மளிகை பொருட்களை விற்கும்போதுதான், கடந்த மே மாதம் துர்காதேவியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இது நாளடைவில் தகாத உறவாக மாறியிருக்கிறது.. இதையடுத்து 2 பேருமே அடிக்கடி தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. துர்காதேவிக்கு அருண், அடிக்கடி பணமும் தந்து வந்திருக்கிறார்.. சமீபத்தில் அருண் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்..
ஆத்திரம்: அன்றைய தினம் 2 பேருமே தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. அப்போது, துர்கா தேவிக்கு ஒன்றரை பவுன் நகையை, பரிசாக தந்திருக்கிறார் அருண். அப்படித்தான், சம்பவத்தன்றும், புஷ்பவனம் பீச்சில் துர்காதேவியுடன், மாணவர் அருண் தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது துர்காதேவி, அருணிடம் ஒரு லட்சம் பணம் கேட்டிருக்கிறார்.. அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று அருண் சொன்னாராம்.. இதுவே 2 பேருக்கும் வாக்குவாதமாக மாறியிருக்கிறது..
அப்போது துர்காதேவி, பணம் தராவிட்டால், இந்த தகாத உறவை வெளியே சொல்லி விடுவேன், அப்பறம் உன் எதிர்காலமே பாழாகிவிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அருண், துர்காதேவியை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.. பீச்சிலேயே 3 முறை காரை ஏற்றி கொன்றிருக்கிறார்.. இதில் துர்காதேவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது தெரியவந்தது.. இவ்வளவு விசாரணையில் உறுதியானதையடுத்து, அருணை போலீசார் கைது செய்துள்ளனர்..
கொடுமை: தன் மகனின் வயசு என்றுகூட பார்க்காமல், தானும் அநியாயமாய் செத்து, ஒரு மாணவனின் வளமான வாழ்க்கையையும் சீரழித்துவிட்டது அந்த, பாழாய்போன கள்ளக்காதல்..!!