Hero Passion Pro Discontinued – ஹீரோ பேஷன் புரோ 110 பைக் நீக்கப்பட்டதா ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் கிடைத்து வந்த பேஷன் புரோ பைக் மாடல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 113.2cc என்ஜின் பெற்ற மாடல் பேஷன் பிளஸ் வருகைக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேஷன் எக்ஸ்டெக் எனப்படுகின்ற கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்றுள்ள மாடல் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்று முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளே கிளஸ்ட்டரை பெற்றுள்ள வேரியண்ட் விற்பனை செய்யப்படுகின்றது.

Hero Passion Pro discontinued

113.2சிசி என்ஜின் பெற்றிருந்த ஹீரோ பேஷன் புரோ பைக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் இயக்கப்படுகின்ற (XSens Programmed fuel injection) 7,500 ஆர்.பி.எம்-ல் 8.9 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்-ல் 9.79 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ்  பெற்றிருந்தது.

சமீபத்தில் இதே என்ஜினை கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட பேஷன் எக்ஸ்டெக் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் இணைக்கப்படுகின்ற டிஜிட்டல் மீட்டர் கன்சோல் வாயிலாக கால், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் விபரம், மைலேஜ் விபரம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான வேரியண்ட்டை கொண்ட ஹீரோ பேஸன் எக்ஸ்டெக் விலை

PASSION XTEC DRUM BRAKE ₹ 78,978

PASSION XTEC DISC BRAKE ₹ 82,678

(EX-showroom Tamil Nadu)

passion xtech

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.