சென்னை: நடிகர் கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்ரம் படத்தின் சிறப்பான வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன், அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
அடுத்ததாக ஹெச் வினோத், மணிரத்னம் என சூப்பர்ஹிட் இயக்குநர்களுடன் கமல் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் மோதும் கமலின் இரு பிரம்மாண்டமான படங்கள்: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருபவர். சினிமா தவிர்த்த பல்வேறு விஷயங்களிலும் ஜாம்பவானாக திகழ்கிறார். இப்போதும் சிறு குழந்தையின் ஆர்வத்துடன் அனைத்து புதிய விஷயங்களையும் கற்கும் ஆர்வத்தை இவரிடம் பார்க்க முடிகிறது. சமீப நாட்களில் போட்டோகிராபராக கையில் கேமராவுடன் இவர் சுற்றி வருகிறார்.
தான் செல்லும் இடங்களில் அழகான தருணங்களை இவர் தனது கேமராவில் சிறை பிடித்து வருகிறார். அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்காக கமல் சென்ற தைவான், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இவர் போட்டோகிராபராக மாறி சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தைவானின் பாரம்பரிய இசைக்கருவியையும் வாசித்து, அதன் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இந்தியன் 2 படத்தில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தப்படத்தில் சேனாபதி என்ற கேரக்டரில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். முதல் பாகத்திலும் இந்த கேரக்டர் முக்கியமான கவனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த கேரக்டரில் கமலை மீண்டும பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் சூட்டிங் இம்மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் பிராஜெக்ட் கே படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் 2024 பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என கமலின் அடுத்தடுத்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும் வாய்ப்பு உள்ளது.
இந்தியன் 2 மற்றும் ப்ராஜெக்ட் கே என இரண்டு படங்களும் மிகவும் பிரம்மாண்டமான படங்களாக உருவாகி வருகின்றன. தன்னுடைய கேரக்டர்களை இந்தப் படங்களில் கண்டிப்பாக கமல்ஹாசன் சிறப்பாகத்தான் கொடுப்பார். அந்த வகிய்ல, இந்த இரு படங்களும் திட்டமிட்டபடி உருவாகும் பட்சத்தில், ஒரே நாளில் கமலின் இரண்டு படங்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். இந்திய சினிமாவில் சிறப்பான தருணமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.