இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் eVX எலக்ட்ரிக் எஸ்யூவி கார் போலாந்து நாட்டில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது.
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ள இந்த பேட்டரி மின்சார கார் டொயோட்டா மற்றும் சுசூகி கூட்டணியில் வரவுள்ளது.
Maruti Suzuki eVX electric SUV
மாருதி YV8 எஸ்யூவி மற்றும் டொயோட்டா பிராண்டில் வரவுள்ள மாடலும் இந்தியாவில் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
eVX எஸ்யூவி 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போது இந்திய சந்தையில் கிடைக்கின்ற கிரெட்டா இவி, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் இவி போன்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.
eVX கான்செப்ட் நிலையில் காட்சிப்படுத்தியதை போன்றே முன்பக்க தோற்ற அமைப்பு அமைந்துள்ளது. முழுமையாக மூடப்பட்டுள்ள இந்த காரில் தற்காலிகமான ஹெட்லைட் மற்றும் டெயில் விளக்குகள் உள்ளன.
மற்றபடி, கான்செப்ட் நிலை மாடலுக்கு இணையான வடிவத்தை பெற்று இன்டிரியரிலும் அகலமான பெரிய டிஜிட்டல் இன்ஃபோட்யின்மென்ட் மற்றும் கிளஸ்ட்டர் ஒரே டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளுகின்றது.
இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய eVX எஸ்யூவி காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது. 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400கிமீ வரம்பினை வழங்கலாம்.
2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.