இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையாக கொண்ட மாருதி சுசூகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) எம்பிவி கார் டீலர்களை வந்தைந்துள்ள படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. இன்விக்டோவில் பேட்ஜ் மற்றும் முன்புற கிரிலை தவிர பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை.
184 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
Maruti Suzuki Invicto MPV
தோற்ற அமைப்பில் முன்புற கிரில், ஹெட்லைட், பம்பர் அமைப்பில் மட்டுமே மாற்றம் பெற்றிருக்கும். மற்றபடி இன்டிரியர் உட்பட அனைத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் டொயோட்டா லோகோவிற்கு மாற்றாக சுசூகி லோகோ மட்டும் மாருதி சுசூகி இன்விக்டோ காரில் இடம்பெற்றிருக்கும்.
10-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல்-சோன் காலநிலை கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் ஒட்டோமான் கூடிய பவர் கேப்டன் இருக்கைகள் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்கான அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா பெற்றிருக்கும்.
விலையை சற்று குறைப்பதற்காக ADAS எனப்படுகின்ற நவீனத்துவமான பாதுகாப்பு வசதிகளை பெறாமல் இன்விக்டோ அறிமுகம் செய்யப்படலாம்.
இன்விக்டோ காரின் 7 இருக்கை அனைத்து வசதிகளையும் பெற்ற ஆல்பா+ என்ற ஒற்றை வேரியண்ட் மட்டும் கிடைக்கும். இதில் நெக்ஸா ப்ளூ நிறத்தில் விற்பனை செய்யப்படலாம்.
மேலும் விபரங்கள், ஜூலை 5, 2023 அதிகாரப்பூர்வ இன்விக்டோ விலையை மாருதி சுசூகி அறிவிக்க உள்ளது.