Naa Ready: இந்த மூன்று பாடல்களின் காப்பி தான் நா ரெடி பாடலா? ஆதாரத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
லியோ படத்தில் இருந்து நா ரெடி பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. தளபதியே இப்பாடலை பாட லோகேஷின் உதவி இயக்குனர் விஷ்ணு இப்பாடலை எழுதியுள்ளார். செம மாஸான தர லோக்கலான இப்பாடலில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்.

மிகப்பிரமாண்டமாக உருவான இப்பாடலில் விஜய்யுடன் மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடனமாடியுள்ளனர். மேலும் படத்தின் பிளாஷ்பாக் போர்ஷனில் இப்பாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சாதனை படைத்த நா ரெடி

இந்நிலையில் ஒருபக்கம் இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்று யூடியூபில் பல சாதனைகள் படைத்து வரும் அதே சமயத்தில் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. அதாவது லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலில் விஜய் புகைபிடிப்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவிக்க படத்தின் கதைக்காக மற்றும் கதாபாத்திரத்திற்காக தான் விஜய் புகைபிடிப்பது போல நடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் விமர்சனத்திற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

Naa Ready: போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..ஒரே பாடலில் ஒட்டுமொத்த கதையையும் சொன்ன லோகேஷ் கனகராஜ்..!

மறுபக்கம் நா ரெடி பாடலை கேட்கும்போது பல பாடல்களின் சாயல் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். அதாவது தனுஷின் நடிப்பில் வெளியான மாரி படத்தில் இடம்பெற்ற தர லோக்கல் பாடலை போல நா ரெடி பாடல் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர் மாஸ்டரின் வாத்தி கம்மிங், டான் படத்தில் இடம்பெற்ற ஜலபுலஜங் போன்ற பல பாடல்களின் சாயல் நா ரெடி பாடலில் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை

இதையடுத்து அஜித் ரசிகர்கள் சிலர், அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்தில் இடம்பெற்ற திருப்பதி வந்தா திருப்பம் பாடலை போல நா ரெடி இருப்பதாக கூறி வருகின்றனர் . இவ்வாறு பல பாடல்களை அனிருத் காப்பி அடித்திருப்பதாக கூறி வந்தாலும் அதையும் தாண்டி இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. இதைப்போல பலமுறை அனிருத்தின் பாடல் காப்பி என விமர்சனங்கள் வந்தாலும் அதையும் தாண்டி அவரின் பாடல் ஹிட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.