Regina Twitter Review: படு ஹாட்டான காட்சிகளில் நடித்த சுனைனா.. ரெஜினா பட ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: நடிகை சுனைனாவை கடத்தி விட்டனர் என்கிற ரீதியில் சமீபத்தில் ப்ரமோஷன் செய்து பரபரப்பை கிளப்பி இருந்தனர். இந்நிலையில், சுனைனா நடித்துள்ள ரெஜினா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சிவாஜி படத்தில் சின்ன ரோலில் சுனைனா நடித்திருந்தாலும் படம் ரிலீஸ் ஆகும் போது அவரது போர்ஷனே கட் செய்து விட்டனர்.

அதன் பின்னர் நகுல் உடன் இணைந்து காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த சுனைனாவின் அழகில் ஏகப்பட்ட ரசிகர்கள் விழுந்தனர். சில்லுக்கருப்பட்டிக்கு பிறகு சுனைனாவுக்கு சூப்பரான படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவர் நடித்த ட்ரிப் படம் சொதப்பியது. இந்நிலையில், ரெஜினா எப்படி இருக்கு என நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

யூகிக்க முடியாத கிளைமேக்ஸ்: இயக்குநர் டோமின் டி சில்வா இயக்கத்தில் சுனைனா நடிப்பில் படு போல்டான படமாக வெளியாகி உள்ள ரெஜினா படத்தின் கிளைமேக்ஸ் கொஞ்சம் கூட பிரெடிக்டே பண்ண முடியாத கிளைமேக்ஸ் ஆக ரசிகர்களை சீட் எட்ஜுக்கே கொண்டு வந்து விட்டது என படத்தின் பக்காவான கிளைமேக்ஸை இந்த நெட்டிசன் பாராட்டி உள்ளார்.

மேலும், ரெஜினா படத்துக்கு 5க்கு 3 ரேட்டிங் கொடுக்கலாம் என்றும் சுனைனாவின் நடிப்பு தான் வெறித்தனம் என தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பழிவாங்கும் மனைவி: தனது கணவனை கொன்றவர்களை Revenge எடுக்கும் மனைவி இந்த #Regina! பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறது ! விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம்! சிறப்பான நடிப்பு சுனைனா! நல்ல திரில்லர் Rating 3/5 என இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன.

Regina Twitter Review: Sunaina shines with her incredible bold avatar

சுமாரான சுனைனா படம்: அவ்ளோ சூப்பர்னும் சொல்ல முடியாது, அவ்ளோ சுமாருன்னும் சொல்ல முடியாது.. சுனைனாவின் நடிப்பு மட்டுமே ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. இயக்குநரின் முயற்சிக்கு பாராட்டலாம். முதல் பாதி முழுக்க பல இடங்களில் சொதப்பலாக செல்கிறது. அதற்கான இணைப்பு புள்ளிகள் இரண்டாம் பாதியில் நியாயம் சேர்க்கிறது என இந்த நெட்டிசன் படத்திற்கு கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

Regina Twitter Review: Sunaina shines with her incredible bold avatar

ஒருமுறை பார்க்கலாம்: பழிவாங்கும் படலத்தை சிறப்பான படமாக இயக்குநர் கொடுத்திருக்கிறார். சுனைனா அதில் சும்மா புகுந்து எந்தளவுக்கு ஹாட்டாகவும் போல்டாகவும் நடிக்க முடியுமோ நடித்து மிரட்டி இருக்கிறார். கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் என ஏகப்பட்ட ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

Regina Twitter Review: Sunaina shines with her incredible bold avatar

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.