Vijay: ஒரு வருங்கால முதல்வர் இப்படி சொல்லலாமா விஜய்: இந்தா கெளம்பிட்டாங்கல்ல

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Thalapathy Vijay: நா ரெடி பட பாடல் வீடியோவால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார் தளபதி விஜய். இதனால் லியோவுக்கு இலவச விளம்பரம் கிடைத்தாலும் கிடைக்கும்.

​நா ரெடி வீடியோ​அஸ்வின்ஸ் விமர்சனம்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. விஜய்யின் பிறந்தநாளையொட்டி லியோ படத்தில் வரும் அறிமுக பாடலான நா ரெடியின் லிரிக்கல் வீடியோவை நேற்று மாலை வெளியிட்டார்கள். அனிருத் இசையில் விஜய்யும், பிக் பாஸ் பிரபலம் அசல் கோலாரும் பாடியிருக்கிறார்கள். அனிருத்தும் பாடியுள்ளார். அந்த பாடலில் வரும் வரிகள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளது.ஐஸ்வர்யா ராஜேஷ்​ரசிகர்களுடன் பேசி..க்யூட்டாக போஸ் கொடுத்த ஜஸ்வர்யா ராஜேஷ்!​​உங்கள் விஜய்​விரைவில் அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருக்கிறார் விஜய். இந்நிலையில் நா ரெடி பாடலில் பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாவ கொண்டுவா cheers அடிக்க, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பாரு என பாடியிருக்கிறார் உங்கள் விஜய். அதை பார்த்தவர்களோ, ஒரு வருங்கால முதல்வர் இப்படித் தான் பொறுப்பில்லாமல் மது அருந்துவது பற்றி பாடுவதா?. இது தவறான முன்னுதாரணமாகிவிடுமே என தெரிவித்துள்ளனர்.
​தம்மு, சரக்கு​நா ரெடி பாடலை சும்மா கேட்டு என்ஜாய் பண்ணுவதை விட அதில் வரும் வரிகளுக்கு அர்த்தம் தேடுவதில் தான் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் விஜய்யின் அரசியல் என்ட்ரி தான். நா ரெடி பாடலுக்காக வெளியிட்ட போஸ்டரில் விஜய்ணா தம்மடித்தார், தற்போது சரக்கடிப்பது பற்றி பேசுகிறார். இவரை பார்த்து ரசிகர்கள் கெட்டுப் போக மாட்டார்களா, அரசியலுக்கு வருபவர் பொறுப்பாக இருக்க வேண்டாமா என ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள்.

​போஸ்டர் அடி, அண்ணன் ரெடி​விஜய்யின் பிறந்தநாளையொட்டி மதுரையை சேர்ந்த ரசிகர்கள் ஒட்டிய இரண்டு போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு போஸ்டரில், 65 ஆண்டு காலமாக திராவிட ஆட்சிகள் மாறினாலும்.. மக்கள் துயர்படும் காட்சிகள் மட்டும் மாறவில்லை..தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி. உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி. 2026- time to lead என இருந்தது. இன்னொரு போஸ்டரில் அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே… ஆண்டவர்-ஆழ்பவர் விரும்பும் தமிழின முதல்வனே என இருந்தது.

​Vijay: தளபதியே முடியட்டும் திராவிட ஆட்சி, உந்தன் தலைமையில் மலரட்டும் மக்களாட்சி: வைரல் போஸ்டர்

​விஜய் சொல்லித் தான்…​விஜய் ரசிகர்கள் என்னவோ தளபதி மீதான பாசத்தில் அப்படி போஸ்டர் அடித்தார்கள். இந்நிலையில் நா ரெடி பாடல் வீடியோவை பார்த்தவர்களோ, ரசிகர்களை அப்படி போஸ்டர் அடிக்கச் சொன்னதே விஜய் தான் போன்று என்கிறார்கள். அதற்கு காரணம் நா ரெடி பாடலில் வரும் வரி. போஸ்டர் அடி அண்ணன் ரெடினு விஜய் பாடியிருக்கிறார். அதனால் தான் ரசிகர்கள் அப்படி போஸ்டர் அடித்திருக்கிறார்கள் என பேசுகிறார்கள்.

​அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?

​தளபதி ரசிகர்கள்​ஒரு பாடலாசிரியர் எழுதியதை விஜய் பாடியது ஒரு குத்தமாய்யா?. அரசியலுக்கு வருகிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நா ரெடி பாடலை இப்படி கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு பார்த்தால் எப்படி?. பாடலை கேட்டோமா, ரசித்தோமா, டான்ஸ் ஆடினோமா என்று இருக்க வேண்டும். இப்படிலாம் பண்ணக் கூடாது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.